WWW.NEVANNILAND.WEEBLY.COM      நல்வரவு    WWW.JOYROS.WEEBLY.COM

Picture

உன் குரல்

Picture
முதல் முறை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து
உன் குரலில் தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள்

என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால்
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா!
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.!
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமில்லாமல்..
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக
வாழ அடம் பிடிக்கிறது...!

என் உறவென உனை மாற்றினாய்!
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்தது
நித்தமும் பார்க்க வைத்தாய்.!
என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு
வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்.......!


என் இ௫ விழிகள்.....

Picture
கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்க்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை

உன் பாசம் எல்லாம் வேசம்...

Picture
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....
இருப்பாய் பாசமாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....

நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...
வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்
யார்தான் புரிவாரோ இவள் மனசை....

Picture
என்னவனே தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து இதயத்தில் உன்னை வைத்து கொண்டு வாழ்க்கை என்னும் நரகத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

Picture
இனியவனே உன் என் இனிமையான நினைவுகளை கவிதையாக கோர்த்து என் மாலையாக கழுத்தில் அல்ல இதயத்தில் அணிந்து இருக்கிறேன் நீ என்னை மறந்து விடாதே நீ மறந்தால் கூட என் கவிதைகள் உனக்காக காத்திருக்கும் என் கவி வலையில்

Picture
கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!

Picture
நெஞ்சில் கனவில் நினைவில் மேடையிட்டு என் இதயத்தில் இடம் பிடித்தவளே மொட்டாக உன் இதழ் இமைகள் மூடிக்கொண்டு இருக்கும் உன் மணிச்சர விழிகள் என் மேல் மலர்ந்தால் போதும் வேறன்ன வேண்டும் எனக்கு

Picture
உன் இரு விழிப் பிரகாசம் கண்ட ஆதவன் ஒளிந்தான் மேல்த் திசையில்.... மங்கலாய் வான் மதி வெட்க்கி உனைப் பார்த்து மூடினாள் முகம் கருமுகில் கொண்டு..

Picture
பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு

ஆனால் மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.

என் காதலை அடி மனதுக்குள்
ஆழ புதைத்து விட்டு
சாதாரண மனுசியாக வாழ நினைக்கின்றேன்..

ஆனால் உன் குரல் கேட்டால்
என் மனதுக்குள்
கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
என் மனதில் ரணங்களாய் குத்தும்
என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
பாதையில்தான் நான் பயணிப்பேன்
என்று என் மனம் துடிக்கிறது..

வேதனைகள் மட்டும் சோதனைகள்
ஆகிப்போன வாழ்வில் சாதனைகள் செய்ய துடிக்கும்
இவள் வாழ்வில் மீண்டும் சோதனைகள்தான்
வாழ்க்கையாகி போகுமா.?
விடை தெரியாதா பதிலாகி போன
என் வாழ்வில் கேள்விகள் மட்டும்
வர்க்கத்தில் விரிகின்றது

வினாக்கள் யாவும் கனாக்களில் பதில் சொல்ல
என் காதலையையும் கனாக்களில் சொல்லிவிட்டு
காலத்தை கரத்து கொள்கிறேன்
வரும் ஜென்மத்திலாவது
உன்னோடு நான் சேர்ந்து வாழ்வேனா...?

Picture
உன் நினைவுகளை தினம் தினம் சுமந்து
இமைகளை வருத்தி இதயத்தை கிழித்து
நான் பெற்ற குழந்தைகள் என் கவிதைகள்...

Picture
ஓ நண்பனே ..!!!
உறக்கத்தை மறந்த உன் கண்கள்
பூமியில் எதை தேடுகின்றன..?
புதைந்து போன வாழ்வையா..?
புதிர் போடாதே நேற்றைய கனவில்
நாளைய கற்பனையில் இன்றைய
வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடினால் கிடைக்குமா நண்பனே.. ?

விளக்கொளியை கண்டு விரைந்து மடியும்
விட்டில் ஆகிவிடாதே நண்பனே..
தோல்வியை கண்டதும் தூக்கு கயிற்றை தேடாதே
அவ நம்பிக்கையை ஆறடிக்குள் புதைத்து விட்டு
தன்னம்பிக்கையை மன அரங்க்குள் விதை..!!!

அந்த பூக்கள் பூப்பறிப்பவனை கண்டும்
புன்னகை பூக்கின்றன....!!!
மரம் வெட்டிகளுக்கு கூட அந்த மரங்கள்
நிழல் தருகின்றன ..!!!
அந்த கடலின் அலைகள் தோற்று போனாலும்
மீண்டும் கரையை அடைய போராடுகின்றன..!!!..

ஆனால் நீயோ உனக்கே பாரமாய் இருக்கின்றாய்
தோல்வியை கண்டதும் துவண்டு விடுகின்றாய்
இருட்டில் இருந்தது போதும் வெளியே வா
நாளைய பொழுது நிச்சயம் உனக்காய் விடியும்
நம்பிக்கையோடு நடை போடு
நாளை உலகம் உன் கையில்..!!!

Picture
 வந்ததாய் நானக மாறினேன்
தீயாக தீண்டினாய் தொலையாமல் தொலைந்தே போனேனே
தொலைவாக நான் இருந்தாலும்
தொலை தூர பார்வையாய் உனை பார்க்கிறேனே

ஓ ஓஒ ஓஒ ஓஓஓ
சித்ததில் கலந்து நித்தம் நித்தம் நினைவினில் வந்து
யாதுமாகி என்னுள் நுளைந்து ஆட்டி வைத்தாய் எனை நீயே
ஓ ஓஒ ஓஒ ஓஓஓ

என்னுள் கலந்தாய் நீயே உன்னுள் உறைந்தேன் நானே
இரக்கம் காட்டி இதய வாசல் திறக்கமாட்டாயா
உதிரம் கொதிக்கிறதே உணர்வுகள் வெடித்து சிதறுதே
உயிரும் விடை பெற துடிக்குதே


Picture
பெண் ;

உன்னைப் பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே

என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து
நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே
என் காதல் புரியவில்லையா?
அறிந்தும் அறியாதவனே
புரிந்தும் புரியாதவனே
புலம்புகின்றேன் புரியவில்லையா?
எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா?

ஆண் ;
அறிந்தேன் பெண்ணே அறிந்தேன்
புரிந்தேன் கண்ணே புரிந்தேன்
புலம்ப வேண்டாம் பெண்ணே
உந்தன் காதல் வேண்டாம் கண்ணே
வரும் காலம் யாவும்
கண்ணீர் துளிகள் வரவாகுமே
துன்பங்கள் தொடராகுமே
இன்பங்கள் தொலைவாகுமே
உன் காதல் சில நாளில்
தேய் பிறையாகி போகுமே
என் காதலும் வேண்டாம் பெண்ணே
உன் காதலும் வேண்டாம் கண்ணே...

Picture
சில நாட்களில் பிரிய போகும் என் உயிர்
பல நாட்களாய் தொடரும் உன் வெறுப்பு
"இரக்கமில்லா ."நீ..."இல்லா "உன் காதல்..".
இவையொன்றும் எனக்கு வேண்டாம்..
நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம்...
என் காதல் ஒன்றே எனக்கு போதும்..
காதலே இரக்கமில்லா என்னவளை
காதலித்தற்க்காக என்னை மன்னித்து கொள்...


காதல்

Picture
காதல் உன்னைப்போல் எனக்கும் கற்ருக்கொடு
 இதயத்தை கல்லாக மாற்ருவதற்கு

தலை நிமிர்ந்து செல்லுவோம்

வஞ்சங்  கொண்டவர் புடைசூழ குலவி
வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து
விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து
பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து
மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க
உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் கலைத்து
உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி
மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து
தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து
இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி
காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து
சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி
சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து
பொய் பாசத்தொடு பட்டணத்தில் வீடு தாறேன் என்று
ஆசை காட்டி மோசம் செய்து ஆடைகளும் களைத்து
தாயோடு தாய் நாடும் சேர்த்தெடுக்கும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

தோல்வி கண்டு தொடர்பிழந்து நிலைப்பில் நிர்மூலமாகி
நிந்திக்கும் தந்தி கண்டு நிகரில்லா இடர் தந்து கூடி
வெற்றி யென்னும் மாயை சூடி நிஜத்தினில் பாடி
வலை வீசி உலை குழைத்து வஞ்சம் தீர்த்து போயினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

கரம் பற்ற முடியாமல் கைகளையும் புதைத்து
கால்களிலே கடிவாளம் நீளத்திற்கு பூட்டி
கண்டபடி மாதருயிர் பருகி நிதம் ஊண் தேற்றி
புறமுதுகு காட்டி எம்மை ஓடச் சொல்லும் போதிலும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

கண்டவரும் நற்றமிழை நாசஞ் செய்ய துடித்து
நாவாலே வளைவுகளால் நாட்களையும் கடிந்து
குடி தன்னில் குடி சேர்த்து கூர் வாளால் கிழித்து
உயிர் குடிக்க சுரம் சேர்த்து யாக்கை தன்னை முடக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

எட்ட நிற்கும் தென்றலுமே எட்டி வந்து இடித்து
ஏழ் கடலு மொன்றாகி கிட்ட வந்து அடித்து
எரிமலையில் தீப்பிளம்பு முட்ட வந்து பொசுக்கி
பஞ்ச பூதமுமே ஒன்றாகி பறந்து வந்து தாக்கினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

புரியாத மொழியினிலே உணர்வு புதிராகப் பேசி
உள்ளங்கள் மீதினிலே உவர் நெருப்பள்ளி வீசி
கனவுதரும் நினைவினிலே கடை நொடியை களைத்து
நித்தம் நித்தம் நிறுத்தாமல் நித்திரையைக் குழப்பினும்
தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்

இறைவா நீயுமா?

Picture
இறைவா நீயுமா ஈழமண்ணில் எமக்கெதிராய்
ஆண்ட எம்மினத்தை அடக்கி ஆழ நினைக்கிறது சிங்களம்
கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றது
மனச்சாட்சி அற்ற வல்லரசுகள்.

ஈழ வரிப்புலிகள் வீரப்படை நடத்துகையிலே
நீ போய் நின்று தோள் கொடுப்பாய்
என்றெண்ணி நோன்பிருந்தோம்
தஞ்சம் என்று உன்னை நம்பி
தேவாலயம் வந்த போது அங்கும் கொன்றாய்
கோவில் வந்த போது அங்கும் கொன்றாய்

இடையில் வெள்ளப்பெருக்காகவும்
தாக்கியது உமக்கு நினைவிலையோ?
இனி நாடுதற்கு இடம் இன்றி
கடற்கரையை நாடிவந்த வேளையிலே
சூறாவளி வடிவில் நீ வந்து எமை
அழிக்க நினைப்பது சரியோ? இது முறையோ?

மருந்தில்லை உணவில்லை
ஆதரிப்போர் யாரும் இல்லை
என அறிந்து ஆழக்கடல் அலையே
எமை வாரி அழிக்க நினைக்கின்றயோ?
ஈழத் தமிழினத்தை பூண்டோடு அழிக்க என முழு உலகும்
நினைத்திருக்க கொடியசைத்து வாழ்த்து தெரிவித்தீரோ?

மேற்குலகுடன் சேர்ந்து பாராமுகமாய் இருந்தாய்
பரவாய் இல்லை ஆனால்
தெற்காசிய வல்லரசுகளுடன் சேர்ந்து
உன் பங்குக்கு சூறாவளி அனுப்பி
நீ மகிழ்கிறாயோ புரியலையே தங்குதற்கு வீடு இன்றி
தரப்பாழ் விரித்து தமிழினம் இருப்பதும்
உனக்கு பிடிக்கலையோ இறைவா.....?

நான் தேடிப் பார்க்கிறேன்!

Picture
சிரட்டைக் கரிப்பொட்டு நெற்றியை மறைக்க
கள்ளங் கபடமில்லாக் குண்டுமணி விழிகளுடன்
தரையில் மார்பழுத்தித் தவழ முயற்சிக்கும்
மழலையின் படமொன்றை என்மகன் உற்றுநோக்குகிறான்.

செழுமைக் கன்னத்தில் குழிவிழும் சிரிப்புடன்
மெழுகுப் பொம்மைபோல் அரைசாண் களிசாணுடன்
பிஞ்சுக் கரங்களை இடுப்பில் சேர்த்திருக்கும்
சிறுவனின் படமொன்றை என்மகன் உற்றுநோக்குகிறான்.

அரும்பு மீசையுடன் சினிமாப் பாணியிலே
கேசம் சுருள்அலையாய் நெற்றியில் சரசமிட
இளமைக் கற்பனைகள் எழுந்தாடும் கண்களுடன்
துருதுருக்கும் இளைஞனின் படத்தையும் பார்க்கிறான்.

"அப்பா, இது எல்லாம் நீங்கள்தானா?"
பார்த்தவன் நம்பாமல் என்னிடம் கேட்டான்.
"நான்தான், நான்தான்"
உதடுகள் சொன்னாலும் உள்ளத்தில் ஒருகேள்வி.

அந்த மழலை... அந்தச் சிறுவன்... அந்த இளைஞன்...
அவர்கள் எல்லாம் நான்தான் என்றால்...
அந்த உருவங்கள் என்னைவிட்டு எங்கேபோயின?
காலம் கரைத்தவற்றை நான் தேடிப் பார்க்கிறேன்.

ம்...
கிடைத்தது என்னவோ வெறும் ஏக்கம்மட்டும்தான்.



காத்திருப்பேன் உனக்காக.....!

Picture
என்னுயிரே செண்பகமே.........
நலமுடன் நானிங்கு.......
நீயும் நலமெனவே நம்புகிறேன்
எம்மவரும் நலம்தானே....................?

பிரிவு என்பது தாங்கமுடியாதது
புரிகிறது இப்போது எனக்கு.

இனியவளே...................
எதை எழுத ............

அறிமுகமற்ற எம்மிடத்தில்
அரும்பான காதல்
நெஞ்சகத்துள் நிலையானபோது
உள்ளங்கள் உவகை கொண்டதை
நானிங்கு நினைவூட்டவா.......................?

அல்லது...........
பெற்றவர்கள் சம்மதமின்றி
நமதுள்ளம் தவிக்கையிலே
வைரமான வார்த்தைகளால் நீ....
ஆறுதல் சொன்னபோது.................!

வைரமுத்து இங்கிருந்தால்
உன் துணிச்சல் கண்டு
வடித்திருப்பார் கவிதை என்று
நான்கூ றி புளங்காகிதமடைந்ததை
அழகு தமிழில் அடுக்கிடவா.......?

பின்பு......................
நம் காதலுக்கு
பெற்ற வர்கள் சம்மதிக்க...
குழம்பியிருந்த உள்ளங்கள்
குதூகலித்து நின்ற
அந்த நில நிமிடங்களை.....
வார்த்தைகளால் வர்ணித்து
வடிவமைத்து கொடுத்திடவா..................?

நீ...........வரைந்த கடிதத்தில்
தங்கைக்கும் கல்யாண வயது
வரன் தேடவேண்டும்
அதற்குள் நம்மை இறைவன்
ஒன்று சேர்க்க வேண்டும்
என ஆதங்கப்பட்டிருந்தாயே............!
நினைக்கையிலே எனதுள்ளம்
தவிக்கிறதம்மா................

வெளிநாடு சென்றால்
வளமாக வாழ்ந்திடலாமென்றாய்
வளமான தாய்மண்ணை விட்டு....
பிரிய மனம் பொறுக்காதபோதும்
வாக்கு வாதம் ஏனென்று
நானும் சம்மதித்தேன்.

இங்கு..................
எம்மவர்க்கு ஒவ்வாத கலாச்சாரம்
இது கண்டு
தவித்து நிற்கும்
பெற்ற மனங்கள்
ஆனாலும்................புரியாமல்
நடந்து கொள்ளும்
சின்னஞ் சிறிசுகள்

இப்போது புரிந்திருக்கும்
தாய் மண்ணின் தனித்துவம்.

தனிமை என்னை வாட்டினாலும்
இளந்தளிரே....................என்னுயிரே
உன் முகம்
நித்தம் எனது
நெஞ்சத்திரையில் நிழலாடுகையில்
நிம்மதியாய் இருக்கிறது
அதுபோதும் தற்போது.

நிச்சயம் எம்மை
காலம் ஒன்று சேர்க்கும்
அதுவரை என்றும்
உன் நினைவுகளுடன்
காத்திருப்பேன் உனக்காக........

இ.சிவனேஸ்வரன்
"""""""""""""""""""""""



இவர்களை வாழவிடுங்கள்.

Picture
எதிர்பாராத சந்திப்பும்
இனமறியாத நட்பும்
ஏற்படுத்திய உறவால்....
அவர்களும் காதலர்களாயினர்.

காலங்கள் உருண்டோடி....
காதலுக்கு மரியாதைசெய்ய..
இல்வாழ்வில் இணைந்திடவே
இருமனங்களும் சம்மதித்தன.

ஆனாலும் துரதிர்ஸ்டம்......!
சாக்கடை மலரொன்று
சந்தன மரத்துடன்
சல்லாபமா............?

வர்க்கத்துக்குள் வகைபிரித்து
வேடிக்கை பார்க்கும்
மனிதக் கூட்டம்
தடுத்து நிறுத்தி
சங்கடப் படுத்தியது.

சங்கடங்கள் தாங்காமல்
உண்மையான உறவின்
புனிதத்தை புரியவைக்க
புண்பட்ட இதயங்கள்போராடி...
தோற்றும் போயின.............!

ஈற்றில்........ தம்முடிவை
மாற்றிக் கொண்டதனால்
இன்று இவர்கள்....
கல்லறையிலும் காதலர்களாம்.......!

காதலின் மறுவடிவம்
கல்லறைதான் என்றால்
கனக்கிறது என்நெஞ்சம்
கவிஎழுத மறுக்கிறது
என் கரம்.

வகுப்புவாதங்கள் பேசி
வகுத்துப் பார்க்கும்
வக்கிரக்காரர்களின் வரட்டுக்கவுரவத்திற்குள்...
அகப்பட்டு அவஸ்தையுற்று

காட்டாற்று வெள்ளத்தினால்
இழுத்துச் செல்லப்பட்டு
கரை தெரியாமல்போன..
இவர்களது உறவு
இன்னும் புனிதமாகத்தானிருக்கிறது.

தமக்குள்ளே தகுதிபார்த்து
இனிவரும் சந்ததிக்கும்
இதுபற்றி எடுத்துரைத்து
நல்ல உள்ளங்களையும்
ஊனப்படுத்தும் இந்த வர்க்கம்
இவர்களுக்கு............
இனி என்ன
செய்யப்போகிறது......................?

அவர்கள் இன்றிருந்தால்
நிலா முற்றத்து
எனதருமை உறவுகளையும்
அழைத்து வந்து
வர்க்கபேதம் பார்ப்பவரகளிடம்
வாதிட்டு நியாயம் கேட்டு
மணவாழ்வில் இணைத்து
மகிழ வைத்திருப்பேன்.

என்ன செய்வது......?
முடியாமல் போனதனால்
கண்ணீர்த்துளிகளை மட்டும்
காணிக்கையாக்குகிறேன்.

இ. சிவனேஸ்வரன். பிரான்ஸ்.
"""""""""""""""""""""""""""""""""""

Picture

ஏன் பெண்ணே....

Picture
வாழ்க்கை என்னும் ஓடம் மாற்றங்களாய்
மாறியபோது.
மௌனத்தின் பார்வை மட்டும் போதும்
என்றேன்.
ஏக்கங்களாக இருந்த விழி பார்வையால்
பார்த்தபோது.
உன் இரு கருவிழியில் பணப்பேய்
நடமாடியது.
ஏங்கினேன் நம்பவில்லையடி உனை.
காரணம் புரியவில்லை.
என் பாசம் ரோசத்தை மறைத்தது.
வார்த்தைகள் தடுமாறி வாய் ஊமையானது.
வந்த குடியை கெடுத்து உள்ளங்களை
சிதறடித்தாய்.
உன் முடிவரைக்குள் முகவரியை
மாற்றிவிட்டாய்.

நீ.....போடும் வேஷமோ....
சமுதாயத்தில் சீ.....ர் கெட்ட வேஷம்
இருள் கொண்ட போர்வைக்குள்
நீ....மட்டும் புகுந்ததால்
உனக்கு மட்டுமே உனை தெரியும்.
போடி.....போ......
உனது உருவம் உருவெடுத்து ஆடுகின்றது
இம்மண்ணில்.
உனது அகந்தை அழிந்து உனை
நீ....யே.. பார்க்கும் போது
தனிமையில் இருப்பாய்.
அப்போது தேடும் உன்விழி
எங்கே உறவுகள் என்று.
முகவரியை தரமறுக்கும் பெண்ணே.....
உனக்கிது சமர்ப்பனம்.



கல்லறைக் கவிஞன்

Picture
கல்லறைக் கவிஞனொருவன்
கதையொன்று சொல்கின்றான் .... !

திறக்காத கதவுக்குள்
பிறக்காத உணர்வுக்குள்
இருக்காத நிஜமெல்லாம்
இங்கு நான் காண்கின்றேன்...

மொட்டுக்கள் இங்கு மலர்வதில்லை - ஆனால்
பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன
பாட்டுச் சத்தம் கேட்பதில்லை - ஆனால்
படிப்பினைகள் பரந்து கிடக்கின்றன

பயிர் செய்து - விளைச்சலாக்கிட
பசியேனோ வருவதேயில்லை....!
பலம் கொண்டவன் யாரென்று
பனிப்பூவும் அறிந்ததில்லை

நிலமெது..நிழலெது
எதுவுமே புரியவில்லை
உறவெதற்கு..உயிரெதற்கு
அதுவும் கூடப்புரியவில்லை

பசியில்லை - பசித்தாலும் பலனில்லை
வயிறில்லை - இருந்தாலும் வலிப்பதில்லை
உயிரில்லை - இருந்தாலும் மரிப்பதில்லை
அறிவில்லை - இருந்தாலும் பயனே இல்லை....

ஓ....

இவையிருந்த போது - அந்தப்
பூவுலகில் - என்ன செய்தேன் என்ன செய்தேன் ?

என்னருகே வர நீயும் நெடுநாள் சென்றிடுமோ....?
மானிடனே - சொல்லிவிடு சொல்லிவிடு ...........!



நிழலாடும் நினைவுகள்.

Picture
கூடி வாழ்ந்தோம் குதூகலமாய்
கூடாதகாலம் கொடுமைகள் செய்ததனால்
அந்நிய மண்ணில் அகதிகளானோம்.
சுகங்கள் பல இங்குண்டென்றாலும்
சொந்த மண்ணுக்கு ஈடாகுமா................?

பிறந்த மண்ணின் வாசனையும்
பெருமை சேர்க்கும் ஆலயங்களும்
மனக்கண் முன் தோன்றி;
கதைகள் சொல்லும் காட்சிகளை
மறக்கத்தான் முடியுமா..........................?

முற்றத்து மல்லிகையை
தொட்டு வரும் தென்றலில்
நிலா வெளிச்சத்தில் அமர்ந்து
நினைவுகளை நிசமாக்கய நாட்களை
மறக்கத்தான் முடியுமா.............................?

பள்ளிப் பருவத்தில்
பசுமையாய் பதிந்துவிட்ட நினைவுகளும்
அழியாத கோலமாய்........
நெஞ்சகத்துள் கலையாது காத்திருக்கும்
அத்தனையும்....
எத்தனை சுகங்கள்
இங்கு நாம் பெற்றிடினும்
நித்தம் நெஞ்சத்திரையில்
நிழலாடும் நினைவுகளே ..........!

இ.சிவனேஸ்வரன். பிரான்ஸ்.
"""""""""""""""""""""""""""""""""""

வரும் காலம் தரும் கோலம்....

Picture
வலிகள் சுமந்த இதயங்களே
வருந்தும் நிலையது துன்பங்களே
இருந்தும் இதுவரை மௌனங்களே
இழமையின் கனவுகள் தகனங்களே.

புதையுண்டு போன நம்
வேதனைகள் எத்தனை
சிதை கண்டு நீறான
துன்பங்கள் எத்தனை
கதை உண்டு வாழ்விற்கு-எனும்
கற்பனைகள் எத்தனை
இதை எண்ணி வாழ்கின்ற
இதயங்கள் எத்தனை.

மட்டற்ற மகிழ்ச்சிகள்
மண்ணாகிப் போவதும்
மதிகெட்ட மனிதர்கள்
சதிராட்டம் தொடர்வதும்
திக்கெட்டும் கொடுமைகள்
தொடராக நிகழ்வதும்
திருந்தட்டும் சமுதாயம்
என நாங்கள் இருப்பதும்....

விலகாத சொந்தங்கள்
விலையாகிப் போவதும்
விளங்காத நிலை கொண்டு
வலைமீது வீழ்வதும்
வருங்காலம் பதில்கூறும்
வசந்தங்கள் தோன்றுமோ?
வரும் துயர் பறந்தோடும்
வரலாறு தோன்றுமோ?.



மறக்க முடியாத நினைவுகள்....

Picture
மறக்க முடியாத உன் நினைவுகள்
நான் தூங்கும் போது என்
கண்ணைத் தூங்க விடாமல்
கலங்க வைக்கிறது

இருந்தும் என் கண்கள்
உன் நினைவுகளை
சுமக்கவே தயாராகி விட்டது

அன்று ஒரு நாள்
பச்சைப் பசும் சோலைகள் நடுவே
உன் மார்பில் தலை சாய்த்தேன் நான்
அந்த நிமிடம் என்னை அறியாமலே
காதல் அதிகரித்தது

கண்ணா
கண்ணாம்மூச்சி
ஆட்டம் போல் என்
வாழ்க்கையும் ஆகிவிட்டது

மறக்கத்தான் நினைக்கிறேன்
ஏனோ உன் நினைவுகள்
மறுபடியும் வளர்கிறது

உன்னை நான் தொலைத்த
வேளையிலே என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது
இன்றுவரை தேடல் முடியாமல்
தொடரவே செய்கிறது

பள்ளியில் படித்த
பாடத்தை விட
காதல் பாடத்தை படித்ததே அதிகம்
இருந்தும் காதல் பரீட்சையில்
தோற்றுவிட்டேன் நான்

காதலை மையமாக்கி நீ
என் கனவில்
நுழைந்தது ஞாபகம் இருக்கிறது
அதே காதலை மையமாக்கி இன்று
என்னை கைது செய்துவிட்டாயே
அது ஏனோ என் இதயத்தைக் கொல்கிறது

சோகக் கவிதையை எழுத
மனம் இல்லை எனக்கு
இருந்தும் என் பேனா சோகத்தை
மட்டுமே எழுதத் துடிக்கிறது

என் மனதில் உள்ள
காயங்கள் மாறும் வரை
காயம் கொண்ட கவிதைகளே
தொடரும்

உலகம் என்று திருந்தும்

Picture
தேவியே திருவாய் மொழி
ஆவியே தருவாய் விளி
பாவியே கருவாய்- ஒளி
தேடினேன் உனை நாடினேன்.

தேகமே தீயில் வேகுதே
மேகமே இருளில் மூழ்குதே
தாகமே நாவில் தோன்றுதே-தக்க
தருணங்கள் விலகி ஓடுதே.

காதலின் விரக தாபங்கள்
காலையில் கண்ணீர்க் கோலங்கள்
ஆதலால் அன்புத் தீபங்கள்
காற்றில் ஆடுதே காதல் வாடுதே.

வாழ்வில் ஆயிரம் காதல் காவியம்
நாளும் தீயினில் வேகும் கோலங்கள்
காதல் தீயிலே கருகிப் போவதோ?
கானல் நீரென காதல் ஆவதோ?

கண்ணீர் சிந்திய காதல்கள் எத்தனை!
செந்நீர் சிந்திய காதல்கள் எத்தனை!
உறவுகள் சிதைந்த காதல்கள் எத்தனை!
உணர்வுகள் அழிந்த காதல்கள் எத்தனை!

மண்ணை இழந்த காதல்கள் எத்தனை!
மநுநீதி அழிந்த காதல்கள் எத்தனை!
விண்ணை அடைந்த காதல்கள் எத்தனை!
விழிநீரில் மிதந்த காதல்கள் எத்தனை!

காதலில் சரிந்த சாம்ராட்சியங்களும்
காதலால் அழிந்த கோடி கோபுரங்களும்
காதலைப் பிரிக்க கையாண்ட சதிகளும்
எண்ணில் அடங்கா சேதிகள் அன்றோ.

இன்பம் நிறைந்ததே காதல்கள் என்றனர்
காதலின் வெற்றியில் இன்புற்றிருந்தோர்.
துன்பம் நிறைந்ததே காதல்கள் என்றனர்
காதலின் தோல்வியில் வேதனை கொண்டோர்.

எண்ணற்ற காதல்கள் வேதனை தந்தும்
கண்ணற்ற காதல்கள் என்று உணர்ந்தும்
காதலில் வாழும் சோடிகள் கோடி
காதலிற்கென்றும் அழிவில்லைப் போடி.

காதலிற்கு ஆயிரம் எதிரிகள் உண்டு
அந்தஸ்தும் கெளரவமும் சாதியும் மதமும்
பாதி பாதியாய் காதலை எதிர்க்கும்
மீதி சேதியை உலகமே அறியும்.

அல்லும் பகலும் மனம் கல்லாய் கனக்கும்
வெல்லும் காதல் கண்டு உள்ளம் மகிழும்
கொல்லும் காதல் சொல்லும் கதை அறிந்து
உள்ளம் வருந்தும்-இந்த உலகம் என்று திருந்தும்



சாதனையின் வேதனை

Picture
சாதனை எதற்கு?
வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா,
இல்லை பேர் கிடைக்கவா,
இல்லை வாழ்வைக் கழிக்கவா!

தன்னை வருத்தி சாதகம் செய்வதால்
கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு
சமுதாயம் கொடுக்கும் பட்டம்தான் ‘சாதனை’

தன்னை வருத்தி சாதகம் செய்யும் போது
சிந்திய வியர்வைத் துளிகளுக்கும்,
மனதில் உதித்த எதிர்பார்ப்புக்கும்
தக்க பதில்- உணர்வு ரீதியாக கிடைக்கும் போது
கிளம்பும் எதிர்மறை உணர்வுதான் ‘வேதனை’

வேதனைகளைத் தாண்ட
சோதனைகளைத் தாண்டி
சாதனைகளைத் தேண்டியவனுக்கு
வேதனைகளே பரிசனால்- அதுதான்
சாதனையின் வேதனை.
                                                                                            BY-JOY

புதிய பாதைகள் படைப்போம்

அழகிய பூமி, அதைத் தொடும்
எல்லையற்ற வானம்
இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள்.
அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள்

இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி
வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி
அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில்
அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்?

என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்?
ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்
ஆனால் அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம்
எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம்

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய்
உதித்து விந்தைகள் புரிந்த
கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம்
பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங்களாகய்ப் பகுத்துள்ளோம்
எம் எல்லை மீறி பிறவுயிர்ப் பிரதேசங்களைப் பறிக்கிறோம்

ஆற்றல்மிகு அறிவு கொண்டு அணு ஆற்றலை அளவிட்டோம்
அழிக்கும் தொழிலை கையிலெடுத்து காலத்துக்கே சவாலிட்டோம்
மாசு படிந்த எம் மனங்களின் பிளவுகளைச் சரி செய்திட மறந்திட்டோம்
அன்பு நீரூற்ற மறந்திட்டு உறவுகளைக் கருக விட்டோம்

போதும் எம் அறியாமை வளர்த்திட்ட வன் செயல்கள்
வேண்டாம் எம் கொள்கைகள் வளர்த்திட்ட எல்லைகள்
போதாது நாம் கைப்பற்றிய உண்மை ஆற்றல்கள்
வேண்டும் இனி மேலும் புதிய பாதைகள்

எப்போதும் இயற்கையை அணைத்துச் செல்வோம்
அப்போது படைப்பதும் அழிப்பதும் நாமே செய்வோம்
நிலாவுக்கும் இங்கிருந்து ஓர் பாதை அமைப்போம்
பின் இரவிலும் விழித்திருந்து அதை ரசித்திருப்போம்

விஞ்ஞானங் கொண்டு பல கருவி செய்வோம்
நட்சத்திரங்களிலும் நன்கு உலா வருவோம்
ஓரினம், ஒரு பூமி என்று சொல்வோம்
வேற்றுக் கிரகங்களிலும் மாட்சி செய்வோம்

காலம் எப்போதும் பதில் சொல்லாது
புறப்படுவோம் இனியும் காத்திருக்காது
தடைகளைத் தாண்டி முன்னேறுவோம்
அச்சமின்றிப் புதிய பாதைகள் படைப்போம்

அஞ்சுப் பெண்ணுக்கு அன்புப் பரிசு. . .

பூமிப் பந்தின் குறுக்காலே
போட்டுப் பார்த்தேன் நேர்கோடு
ஆமாம் அதுதான் இருவரையும்
அச்சில் இணைத்தது பிணைப்போடு

மட்டும் அல்ல இருவருக்கும்
மனசில் உணர்வுப் பெருக்கோடு
எட்டாத் தொலைவு என்றாலும்
இணைத்த்து பாசம் எனும்கோடு

பொதுவாய் மனிதரை நான்பாடேன்
போற்றிகள் செய்து துதிபாடேன்
எதுவோ தோன்றப் பாடுகிறேன்
எங்கே தங்கை தேடுகிறேன்

எவரையும் அண்ணா எனச்சொல்லி
இதுவரை அழைத்தது இலை என்றாள்
தவறா தெனக்குஅப் பாக்கியத்தைத்
தந்தாள் உரிமை தான்தந்தாள்

நிலாமுற் றத்து நேர் வானில்
நீவிர் எல்லாம் நட்சத்திரம்
வலம் வரும் அஞ்சுப் பெண்மட்டும்
வால் நட் சத்திரம் பாருங்கள். . .

அஞ்சுத் தங்கை படுசுட்டி
அறிவுச் செறிவோ மிகக் கெட்டி
கொஞ்சும் பேச்சோ தேனகட்டி
கொள்ளை அடித்த பெண்குட்டி !

மனசெல் லாம்இனி அணையாத
மத்தாப் பூவாய்ச் சிரிக்கிறது
எனவோ தெரியலை எந்நாளும்
இனிமை யாக இருக்கிறது

எல்லோ ருக்கும் சந்தோஷம்
இனிதே தொற்றிக் கொள்ளட்டும்
கல்லைக் கரைக்கும் பாசமழை
கடகட வென்று கொட்டட்டும்

எவர்க்கும் கொடுக்கா உறவளித்தாள்
என்னை அண்ணா என்றழைத்தாள்
துவர்க்கும் நெஞ்சில் சுகராகத்
துளித் துளியாக ஊற்றெடுத்தாள்

அஞ்சுத் தங்கை படுசுட்டி
அறிவுச் செறிவோ மிகக் கெட்டி
கொஞ்சும் பேச்சோ தேனகட்டி
கொள்ளை அடித்த பெண்குட்டி !

அண்ணா என்ற திருவாய்க்கு
அட்சர இலட்சம் பொன்தரலாம்
என்னால் ஏன்றது இக்கவிதை
இதையே பரிசாய் அளிக்கின்றேன் . . .!

பூக்களில் உறங்கும் மௌனம்

உதயநேரத்திற்கு முன்பே
உதித்து
வியர்வைத்துளிகள் உதிர
ஆக்கள் கழனிக்கு கொண்டு சேர்த்தும்...

உண்ணும் உணவு
உழுத்துப்போன நியாயவிலைக் கடை
அரிசிக் கஞ்சான போதும்
உச்சிவெயில்
மண்டை பிழப்பதையும் பொறுத்து
உலகம் உண்ண
உழுது பயிராக்கியும்...

பயிர் ஊடாடும் களையறிந்து
கை வலிக்க மனையோடு அது களைந்து,
ஏரோடும் மாட்டிற்கும்,
பாழும் வயிறு
ஒரு பொழுதேனும் உணவுண்ண
பால் கரக்கும் பசுவிற்கும்
வரப்போரம் புல் பறித்து ஒய்ந்தும்...

செய்த பயிர் விட்டகல மனமின்றி
சுமந்த புல்சுமையோடு வீடு சேர்ந்து
கழனிநீர் ஒத்த
பழம்கஞ்சினை அமிழ்தமாய் உண்டு இரசித்தும்...

இயற்கைவிட்ட வழியில் தான் ஈன்ற
மழலைச் செல்வங்கள் செய்யும்
குறும்பை உச்சி மோந்து இரசித்தும்,
உதைக்கும் பிஞ்சிக்கால்களில்
பாறை உதடுகளால் வலிக்காது முத்தமிட்டும்...

நாளையப் பொழுதாவது
நன்மைப் பயக்குமென்று நம்பி
நிம்மதியாய் தூங்குகையில்...
ஏழை உழவனின் முகத்தில் தெரியும்

பூக்களில் உறங்கும் மொனம்

இதுதான் காதல்

தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!

சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்
சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல்
அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும்
அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!

பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல்
பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல்
கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும்
கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!

இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல்
இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல்
இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும்
இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!

வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல்
வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும்
வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ
வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!

தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக்
காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும்
அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும்
ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!

இதுதான் வாழ்க்கை ....

வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே

செல்லும் பாதை இங்கே பார்த்தால்
கல்லும் முள்ளும் கரடும் முரடும்
கண்கள் திறந்தே நாமும் வைத்தால்
காலம் முழுதும் மகிழ்வோமே

உள்ளம் முழுதும் உண்மை வைத்தால்
உன்னை வெல்ல உலகில் எவருமில்லை
வெள்ளம் போலே இன்பம் பொங்கும்
வேறு வாழ்வில் ஏதுமில்லையே

சொல்லச்சொல்ல நீயும் திருந்து
சோகம் தீரும் உன்னைக் களைந்து
சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து
சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து

ஏனோ பிடித்திருக்க்கின்றது

தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை
 கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை
 ப்ச்சை வயல்களும் பிடிக்கவில்லை
 யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை
 
 விரும்பி எழுதும் கவிதை பிடிக்கவில்லை
 சிரிக்கும் குழந்தைமுகம் காண பிடிக்கவில்லை
 அழகான என் காதலும் பிடிக்கவில்லை
 கலகலப்பான நட்பும் பிடிக்கவில்லை
 
 விளையாட்டு பொம்மை பிடிக்கவில்லை
 வளைந்து ஓடும் நதியும் பிடிக்கவில்லை
 இரவில்வரும் நிலவும் பிடிக்கவில்லை
 சுட்டெரிக்கும் சூரியனும் பிடிக்கவில்லை
 
 சினிமாவும் பிடிக்கவில்லை
 தனிமையும் பிடிக்கவில்லை
 இனிக்கும் "சொக்ளேட்" பிடிக்கவில்லை
 சிணுங்கும் "செல்போன்" பிடிக்கவில்லை
 
 வாசம் தரும் பூக்கள் பிடிக்கவில்லை
 வீசிப் போகும் தென்றலும் பிடிக்கவில்லை
 சுவாசிக்கவும் பிடிக்கவில்லை
 நேசிக்கும் உறவுகளையும் பிடிக்கவில்லை
 
 என்னை விரும்பும் உன்னை பிடிக்கவில்லை
 உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை
 நாம் ரசித்த எதுவுமே பிடிக்கவில்லை
 உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
 ஏனோ பிடித்திருக்க்கின்றது எனக்கு.


பிடிக்கவில்லை

என் அம்மாவின் அன்பு பிடிக்கும்
அப்பாவின் கண்டிப்பும் பிடிக்கும்
அண்ணாக்களின் அரவணைப்பு பிடிக்கும்
கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்

மல்லிகையின் நறுமணம் பிடிக்கும்
நண்பியின் குறுநகையும் பிடிக்கும்
வெண்ணிலவின் ஒளியதுவும் பிடிக்கும்
வெட்டவெளியில் தனியாக நடக்க பிடிக்கும்

மெல்லென தூறும் மழை பிடிக்கும்
சில்லென வீசும் தென்றலும் பிடிக்கும்
செல்லமாக வளர்க்கும் கிளியும் பிடிக்கும்
சோகமான பாடல்கள் பிடிக்கும்

சொந்தக் குரலதுவும் பிடிக்கும்
மழலைகளின் மொழியும் பிடிக்கும்
கலைகள் சிலைகளும் பிடிக்கும்
சின்னதாக சிரிக்க பிடிக்கும்


வண்னத்துப்பூச்சி பிடிக்கும்
நண்பனின் அறிவுரை பிடிக்கும்
மரங்களின் அசைவும் பிடிக்கும்
கடல் அலையதுகூட பிடிக்கும்

மென்மையாக பேசவும் பிடிக்கும்
இன்னும் எத்தனையோ பிடித்த எனக்கு
என்னையே சுற்றி சுற்றி வரும்
உன்னை ஏன் பிடிக்கவில்லை..?

என்னைச் சுற்றும் பருந்தே
பேதை எனை சிலநாள்
தேடி வராமல் இரு...
பிடிக்கும் என்றறிந்தால்
நாடி உனை நான் வருவேன்..!


மீண்டாள் கன்னியாக

இரு பன்னிரண்டு மாதங்கள்
இருபத்துநான்கு மணிநேரமும்
கண்ணுக்குள் உன் உருவத்தை
பொன்னினால் செதுக்கி வைத்து

இதயத்தில் கனவுகளோடு
இனிமையாக வாழ்ந்த என்னில்
அன்பு சிறிதேனும் இல்லாமல்
காம எண்ணத்தோடு நெருங்கி

என்னை சிதைக்க நினைத்த
உன்னை நான் காதலித்தேன்
என்று எண்ணும் போது
குன்றிப்போகின்றேன் அயோக்கியனே

அவஸ்தையான உன் காதலால்
அருவருப்பாகின்றேன் நான்
உன்னதமானது நம் காதல் என
உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று
காதலை மிதிக்கின்றேன் இன்று
காதலே எனக்கு வேண்டாம்
காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்
கவிதையை துறக்கின்றேன்
உன்னிடமிருந்து விலகுகிறேன்
உத்தமனே நீ நீடூழி வாழ்க

கண்ணிருந்தும் குருடாய்
உன்னில் தடக்கி விழுந்த
பெண்ணிவள் இன்று
மீண்டாள் கொடூரமான
குணங்கள் கொண்ட உன்னிடம்
மாண்டு போகாமல்
மீண்டும் கன்னியாக

ஒருவருட காதல

வருடப்பிறப்பு அன்று கோயிலில்
 திருவிழாக் கால மக்கள் திரளுள்
 கருவிழியாள் உன் பார்வையால்
 அரும்பியது என்னுள் காதல்
 
 தைப்பொங்கல் வரும்வரையில்
 தையலுன் பின்னால் தினமும்
 அலைந்த என் காதலுள்
 தொலைத்தாய் உன் இதயத்தை
 
 மாசி வந்ததும் நாமிருவரும்
 பேசி பேசி காதல் செய்தோம்
 பங்குனி மாதத்தில் உன்
 சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்
 
 சித்திரை மாதம் வந்ததும்
 நித்திரையின்றி புரண்டேன்
 வைகாசி பூத்ததும் நாமிருவரும்
 கைராசி பார்த்து சந்தோசப்பட்டு
 
 ஆனி வந்ததும் உல்லாசமாக
 தேனீக்கள்போல பறந்து திரிந்து
 ஆடி வந்ததும் இருவரும்
 பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்
 
 ஆவணி உதித்ததும் உனக்கு நான்
 தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்
 புரட்டாதியும் வந்தது நமக்குள்
 புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்
 
 ஐப்பசி வெகுவிரைவில் வந்தது
 பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு
 கார்த்திகை பூக்க தொடங்கையில்
 பூர்த்தியானது நம் தொடர்பு
 
 மார்கழி முடியும் வேளையில் எனக்கு
 மூர்க்கம் வந்தது காதல் மேல்..
 சந்தோசமாக மலர்ந்த காதல்
 சந்தேகத்தால் உதிர்ந்தது.
 
 மீண்டும் வருடம் பிறந்தது
 கண்டேன் பல பெண்களை ஆனாலும்
 வேண்டாம் எனக்குள்
 இன்னொரு காதல்....


ஒழுக்கமே உயர்வு தரும்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்

கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்

நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு

கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை

மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை

இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்

பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்

இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்

மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்

கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு

கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்

ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று

நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்

கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.

ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை

ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்

எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்

தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது

மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது

உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு

அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்

உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது

நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்

உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்

நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்

ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது

ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்

இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்

பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்

விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்

உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு

எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்

நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்

கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்

பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்

பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்

வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை
வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்

தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்

மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்
மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

நாம் பிரிந்த நாளில்... 

Picture
உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?
நிற்க...!



இதோ என்  வாக்குமுலம்...


நாம் பிரிந்த நாளில்...
மனதில் ஒரு vaccum,
என் hart, சகாரா வானது,
என் கரையை அலைகள் தொடவில்லை,
என் கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை,
என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு,
என் வானின் நூறு நிலாக்களை காணவில்லை,
என் மின்மினிப்பூச்சிகளிடம் ஏனோ powercut,

அமாவாசைகள் மட்டுமே என் இரவுகள் ஆனது,
நான் பேச யாரோ டப்பிங்,
பசியில்லாத நான்,
காற்றுக்குக்கூட Moodout வீசவில்லை,
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்,
தண்ணீர் அழுகிறதோ.

சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,
சுபம் ... !

கா.மு / கா.பி ......

Picture
      காதலிக்கும்முன்...

எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய நான்,
இவைதான் என் அடையாளங்கள் !

காதலித்தபின்...

உறங்காத
இரவுகள் (என் தலையணை சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???


கன்னீா்.........

Picture
யாரை காதலித்தது
இந்த மேகம்
இப்படி கண்ணீர் வடிக்கிறது .......

என் காதலி..!!! 

Picture

நண்பன் நான் என்று
தோள்களின் மீது
சாய்ந்து கொண்டு
அழுகிறாள்
என் காதலி
தன் காதலனை
நினைத்து...!!!

காதலி கனவை விட நீ பொய்யடி..

Picture
இரட்டை செம்பருத்தி ,பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பூக்கிறது .

இரவின் நட்சத்திரம், பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பிறக்கிறது.

நேற்றுதான் அமாவசை என்றாலும் நிலவு
நிகழ்த்தி விடுகிறது பௌர்ணமியை இன்று .

நடுக்கடல் அலையாய் பெண்ணே அது
நமக்காக கரைகளில் மோதாமல் இருக்கிறது.

குளிர் கூட தென்றலுடன் கோபித்து
கோடையின் நெருப்போடு குலாவி கொண்டிருகிறது !

இப்படிதான் இன்றைய நாளில்
எனக்கும் உனக்கும் திருமணம் நடைபெறுகிறது!


நம் காதல் உன்னால் தோற்று போனால் கூட
என் கனவில் இதோடு எத்தனையோ முறையாய் ?

ஆனால்
உன்னை விட என் கனவு உண்மையடி

நாம் பிரிந்தாலும் நம் காதலை அது பிரிக்கவில்லையடி

நான் எனக்காக கல்லறை கட்டும்போது கூட
என் கனவை நினைத்து
உனக்காக திருமண மண்டபம் கட்டி கொள்கிறேன்

அங்குதான் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமென்று

இந்த கவிதை பத்திரிக்கை கிடைக்கும்போது
கவனமாக கனவின் விலாசம் தேடி வந்து விடு



'செல்' காதல்  

Picture
உன்
இதயத்துடிப்பின்
ஓசை மெசேஜ் டோனாக
அடிக்கும் போது
உன்
'இன்-பாக்ஸை'
திறந்து பார்
மெசேஜ் வடிவில்
என் உயிர்
உன் 'மொபைல் '
தேடி வந்திருக்கும்!


எங்கேயோ படித்தது

Picture
"நான் சந்திரனை காதலித்து இருந்தால்,
என்னை இன்று கவிஞனாக ஆக்கி இருப்பார்கள்.
உன்னை காதலித்ததால் இன்று என்னை பைத்தியகாரனாக ஆக்கி விட்டார்கள்"

"காதலி
என்னதான் என்னை மறந்தாலும்
என்னை பிரிந்தாலும் என்றாவது
என்னை நினைக்கும் போது கண்களில்
வருவேன் கண்ணீராக..."

"உன் பின்னால் திரும்பி பார்
என் நினைவுகள் எல்லாம் நிழலாக
தொடர்கிறது."

"மரணம் எல்லோருக்கும் ஒரு முறைதான் வரும்.
ஆனால் எனக்கோ உன்னை நினைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு
நிமிடமும் மரணம் தான்."

"உன்னை என் இதயம் என்று
நான் சொல்ல மாட்டேன்
ஏன் என்றால் நீ துடித்து
நான் வாழ
விருப்பம் இல்லை."

"உன் சத்தம் கேட்டு எழுந்து
பார்த்தேன் நீ இல்லை
பின்புதான் தெரிந்தது அது என்
இதயத்தில் துடிக்கும்
உன் நினைவுகள் என்று. "

"என் உடல் கூட தனியாக
நடக்க ஆரம்மித்து விட்டது
ஆனால்
என் இதயத்தில் மட்டும் அவள்
இன்னும் என் கை கோர்த்து தான்
நடத்து கொண்டு இருக்கிறாள்
"என் காதலியாக" "

"என் இதயம்
என்ன
கிழிந்த காகிதமா
இப்படி கிறுக்குகிறாய்
உன் நினைவுகளால்"

"பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்."

"மீன்னுக்கு தண்ணீர் மீது காதல்
கடிகாரத்துக்கு காலம் மீது காதல்
கவிஞருக்கு கவிதை மீது காதல்
ஒவியருக்கு ஒவியம் மீது காதல்
சிற்பிக்கு சிலை மீது காதல்
எனக்கு உன் மீது
என்றென்றும் காதல்"

"எல்லோரும் காதலை
சொல்ல ரோஜாவை
தான் தேர்ந்தெடுப்பார்கள்
ஆனால் நான் தவிர்கிறேன்
ரோஜாவில் உள்ள முள்
உன் மென்மையான
கைகளை குத்திவிடும்
அதை என்னால் தாங்கமுடியாது! "

"நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...! "

"நான் முத்தங்களுக்காக ஏங்குபவன் அல்ல..
இருந்தாலும்
உன் எதிர் வீட்டு குழந்தையை
கொஞ்சி அளவில்லாமல்
முத்தமிடும் போதெல்லாம்...
நானும் அந்த குழந்தையாக....!? ..! "
 

என் தவறா !

Picture
உன்னை தொலைத்தேன்
உன் நினைவு சின்னங்களையும் தொலைத்தேன்
என் மனதையும் தொலைத்தேன்
உன் நினைவுகள் மட்டும் தொலையாமல்
என்றும் என்னுடன்
உன்னுள் நான் தொலைந்தது
என் தவறா அன்பே ?

Picture

Picture

காதல்

Picture
  நீயில்லாதஇந்தசோலையில்பூக்களும் பனித்துளிகளும்சிறகிலாமலே பறந்துவிட்டனபாலைவன சோலைஎன..... பேசாத வார்த்தையை விட
பார்க்காத கண்களை விட
உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும்
இதயத்திற்கு தானடி
வலி அதிகம்..
மரணத்தை தேடிச்சென்ற
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல
உன் நினைவுகள் சாகக்கூடாது எ
ன்று....
உன் உதடுக்கள் சொல்ல மறுத்த காதலை உன் கண்கள் காட்டி விட்டன்ன இனியும்  வேண்டாம் பொய் வேசம்...
உன்பார்வையை பறிக்க தெரிந்த எனக்கு,உன் மௌன புன் சிரிப்பை மொழி பெயர்க்க தெரியவில்லை.தெரிந்திருந்தால்,
 இன்
று நான் ஏமந்து நின்றிருக்க மாட்டேன்...



ரோஜாக்களின் முற்கள் குத்தியதால் வந்த இரத்தத் துளிகள் அல்ல இவை. 
என் காதல் ரோஜாவை நீ வாங்க மறுத்ததாள் என் இதயம் சிந்திய கண்ணீர்த் துளிகள்.
என் கல்லறைக்கு அருகில்கூட..அவளுக்கு கல்லறை கட்டி விடாதீர்கள்..
அங்கும் என்னை நிம்மதியாக தூங்க விட மாட்டாள்...!

ஒரு பெண்ணை லவ் பண்ணிக்கிட்டு இன்னொரு பெண்ணை லவ் பண்றது தப்பே இல்லை.காரணம் இரண்டு பெண்ணும் உன்னை கல்யாணம் பண்ணப் போறதில்லை